கொரோனா: தமிழகத்தில் மாவட்டம் வாரியான பாதிப்பின் முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் அதிகளவாக கொரோனா தொற்றுகள் இன்று பதிவாகி இருக்கின்றன.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் பற்றி சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று புதியதாக 1464 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் வரிசையில் தலைநகர் சென்னையில், 396 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதற்கு அடுத்து கோவையில் 158 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சேலத்தில் 93 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 84 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

திருப்பூரில் 71 பேர், திருவள்ளூர் 67 பேர், செங்கல்பட்டில் 48 பேர் திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் தலா 43 பேர், திண்டுக்கல்லில் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  திருப்பத்தூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒற்றைப்படை இலக்கத்தில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.