டெல்லி:

ந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி,  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,797 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து,  4,257 பேர் குணமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 681  ஆக இருப்பதாக வும் இந்திய  சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் வழக்குகள் 21,797 ஆக உயர்ந்துள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் 1,409 பேருக்கு புதியதாக தொற்று உறுதியாகி உள்ளது.  அதுபோல  கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும்  41 பேர் உயிரிழந்ததாகவும், இதன் காரணமாக பலி எண்ணிக்கை   681 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  5,652  ஆக உயர்ந்துள்ளது. இதவரை  269 இறப்புகளுடன் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.  இங்கு மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவி பகுதியில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து 2வது இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. இங்க 2407 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

3வது இடத்தில் டெல்லி மாநிலம் உள்ளது. இங்கு இதுவரை 2248 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

4வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இங்கு இதுவரை  1,629 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5வது இடத்தில் ராஜஸ்தான், அங்கு 1890 பேரும், 6வது இடத்தில் மத்திய பிரதேசம் (1592), 7வது இடத்தில் உத்தரபிரதேசம் (1449), 8வது இடத்தில் தெலுங்கானாவும் (945) பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ளோர் விவரம்..

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 18

ஆந்திரா – 813

அருணாச்சல பிரதேசம் – 1

அசாம் – 35

பீகார் – 143

சண்டிகர் – 27

சத்தீஸ்கர் – 36

டெல்லி – 2248

கோவா – 7

குஜராத் – 2407

ஹரியானா – 262

இமாச்சலப் பிரதேசம் – 40

ஜம்மு-காஷ்மீர் – 407

ஜார்க்கண்ட் – 49

கர்நாடகா – 427

கேரளா – 438

லடாக் – 18

மத்தியப் பிரதேசம் – 1592

மகாராஷ்டிரா – 5652

மணிப்பூர் – 2

மேகாலயா – 12

மிசோரம் – 1

ஒடிசா – 83

புதுச்சேரி – 7

பஞ்சாப் – 251

ராஜஸ்தான் – 1890

தமிழ்நாடு – 1629

தெலுங்கானா – 945

திரிபுரா – 2

உத்தரகண்ட் – 46

உத்தரபிரதேசம் – 1449

மேற்கு வங்கம் – 456

உலகெங்கிலும், மொத்த கொரோனா வைரஸ் வழக்குகள் 26 லட்சத்தைத் தாண்டியுள்ளன, இறப்பு எண்ணிக்கை 1.8 லட்சத்துக்கு மேல் சென்றுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப் பெரிய கொரோனா வைரஸ் வழக்குகள் 8.4 லட்சத்துக்கு மேல் உள்ளன, அதே நேரத்தில் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 46,500 ஐ தாண்டியுள்ளது.

ஸ்பெயினில் 2.08 லட்சம் கோவிட் -19, இத்தாலி 1.87 லட்சம், பிரான்ஸ் 1.57 லட்சம், ஜெர்மனி 1.5 லட்சம், இங்கிலாந்து 1.34 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன.