இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33,10,235 ஆக உயர்வு! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை  33,10,235 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிவிகை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில்,  புதிதாக 75,760 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,10,235 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,023 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள னர். இதனால், உயிரிழந்தோர்மொத்த  எண்ணிக்கை 60,472 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில்இருந்து நேற்று ஒரே நாளில் 56,013 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 25,23,772 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில்,  7,25,991பேர்,  கொரோனா தொற்று காரணமாக,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றுஒரே நாளில் 9,24,998 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,85,76,510 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்ப்பு விகிதம் 1.83%; குணமடைந்தோர் விகிதம் 76.24% ஆக உள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம்  தெரிவித்து உள்ளது.