தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆனது

சென்னை

மிழகத்தில் நேற்று மூவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டு இத்துடன் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.

நேற்று தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியானது.

இதில் கலிபோர்னியாவில் இருந்து வந்துள்ள 64 வயது பெண்மணி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துபாயில் இருந்து வந்த ஒரு 43 வயது ஆண் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் இருவரும் நலமாக உள்ளதாகத் தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.