மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும்  24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாட்டில் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,92,088 ஆக அதிகரித்தது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 108 போ் உயிரிழக்க, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,57,656 போ் உயிரிழந்தனா். இது மொத்த பாதிப்பில் 1.41 சதவீதமாகும். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,08,54,128 போ் குணமடைந்து, இன்னமும், 1,80,304 போ்  சிகிச்சையில் உள்ளன.