சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவல்  நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில், 6,785 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1299 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 6504 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். . இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,36,793 ல் இருந்து 1,43,297 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 71.74 % பேர் குணமடைந்துள்ளனர்
கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.  இதில் 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 66 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். அதில் சென்னையில் மட்டுமே 1,969 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று பாதிப்பு அதிகரிக்க காரணம் அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19 பரிசோதனை நிலையங்கள் 114 (58 அரசு + 56 தனியார்) உள்ளன.
இன்று மட்டும் 63,182 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 21,38,704 ஆக இருக்கின்றது.
தற்போது தமிழகத்தில் 53,132 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜூலை மாதம் 1ந்தேதி முதல் இன்று வரை (24ந்தேதி) தமிழகத்தில்  நாள் ஒன்றுக்கு எத்தனை பேருக்கு கொரோனா  சோதனை செய்யப்பட்டுள்ளது, அவர்களில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியானது, அன்றைய தினம் கொரோனா பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் என்ற விவரங்களின் பட்டியல், வாசகர்கள் எளிதில் புரியும் வகையில்  கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தொற்று பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,132. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 26.5 சதவீதம் ஆகும்.
மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 22,23,019. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 2.7 சதவீதம் ஆகும்.
இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 65,510. இது .08 சதவீதம் ஆகும்.
மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10.3 சதவீதம்.
மொத்தம் (1,99,749) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,21,389 பேர் (60.7 %) / பெண்கள் 78,337 பேர் (39.2 %)/ மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் ( .01%)
தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 4,137 (60.9 %) பேர். பெண்கள் 2,648 (39.1 %) பேர்.
உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன.
உயிரிழந்த 88 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 15 பேர் ஆவர். இது 17 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 3 பேர் . இதில் கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 66 பேர் (75%). பெண்கள் 22 (25 %) பேர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 82 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 6 பேர்.
சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5,486.
இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 20 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 80 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 56 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,100 பேர்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 10,006 பேர் (5%). இதில் ஆண் குழந்தைகள் 5,227 பேர் (52.2%). பெண் குழந்தைகள் 4,779 பேர் (47.8%).
13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,64,995 பேர் (82.6%). இதில் ஆண்கள் 1,00,915 பேர். (61.1%) பெண்கள் 64,057 பேர் (38.8%). மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் (.09%).
60 வயதுக்கு மேற்பட்டோர் 24,748 பேர் (12.3%). இதில் ஆண்கள் 15,247 பேர் (61.6%). பெண்கள் 9,501 பேர் (38.3 %).