ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 355 ஆக உயர்வு

டோக்கியோ:

ப்பான் அருகே நடுக்கலில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.  தற்போதைய நிலையில் 355 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட உள்ளது.

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு த 3 ஆயிரத்து 711 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ளவர்களுக்கு ஜப்பான் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இந்த சொகுசு கப்பலில் 132 பேர் கப்பல் ஊழியர்கள் உள்பட 138 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில்  2 பேருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கப்பலில் பணியாற்றும் மேலும் ஓர் இந்தியருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டு சுகாதார துறை மந்திரி கட்டோ கூறும்பொழுது, இதுவரை 1,219 தனிநபரிடம் நாங்கள் பரிசோதனை மேற்கொண்டோம். இவற்றில் 355 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்குரிய விசயங்களை பற்றி நாம் இப்பொழுது சிந்திக்க வேண்டும் என்றும், உடல்நிலையில் உள்ளவர்கள் வருகிற புதன்கிழமை கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Corona casualties rise to 355 in Japan luxury yacht, ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 355 ஆக உயர்வு
-=-