உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு தீவிரமான கொரோனா பாதிப்பு! பிரிட்டன் ஆய்வு தகவல்…

வாஷிங்டன்: உடற்பயிற்சி இல்லாதவர்களே அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கு பாதிப்பும் தீவிரமாக இருப்பதாக என பிரிட்டன் ஆய்விதழ்  தெரிவித்துள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என முன் னோர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்வில் நோய் நொடி இல்லாமல் வாழ்வது மிகச் சிறந்த வாழ்க்கை என கூறப்படுகிறது.  ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை நல்ல உடல் நலம். அதாவது ஆரோக்கியம். ஆரோக்கியத்தைப் பெற நம் உடல் வலிமையாக இருக்க வேண்டும் என்பார்கள்.  அதற்காகவே பல்வேறு விளையாட்டுக்களையும் முன்னோர்கள் வைத்திருந்தார்கள். ஆனால்,  நவீன டிஜிட்டல் யுகத்தில், உடல்நலத்தை பேணும் விளையாட்டுக்களில் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டாமல், மொபைல் போன்ற டிஜிட்டல்  சேவைகளையே விரும்புகின்றனர். இதனால், இளைய தலைமுறையினர் பல்வேறு நோய்த்தாக்கத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.

தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்றும் இளைய தலைமுறையினரை கடுமையாக தாக்கி வருகிறது. இந்த நிலையில், பிரிட்டனை சேர்ந்த ஜோர்னல் ஆப் ஸ்டோர்ட்ஸ் மெடிசன் என்ற இதழ், உடற்பயிற்சி செய்யாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்க ஏற்படும் பாதிப்பு குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடத்தியது.  அதில், உடநலத்தில் அக்கறை கொள்ளாமல் இருப்பவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் போது, அது தீவிரமாக இருக்கும் எனவும், அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஜனவரி முதல் அக்டோபர் வரை கொரோனா பாதித்த 48,440 பேரிடம்  இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் சராசரி வயது 47 என்றும், இவர்களில் 50 சதவிகிதம் பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில்  குறிப்பிட்ட சதவிகிதம் பேர்  நீரழிவு, நுரையிரல் பாதிப்பு, இதயம் ,  சிறுநீரகம்  புற்றுநோயால் போன்ற எந்தவொரு நோய்களால்  பாதிக்கப்படவில்லை. 20 சதவீதம் பேர் ஏதனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 30 சதவிகிதம்  2 அல்லது3 நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் என்ன குறித்து ஜோர்னல் ஆப் ஸ்டோர்ட்ஸ் மெடிசன் இதழ் வெளியிட்டுள்ளது. அதில்,

கொரோனா தொற்று பாதிப்பதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் வரை உடற்பயிற்சி செய்யாதவர்கள், தற்போது தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள்  மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.

வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை விட,  உடற்பயிற்சி இல்லாதவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் உறுதியாகி உள்ளது.

 மது,  புகைப்பழக்கம், உடற்பருமன் அல்லது அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை  விட உடற்பயிற்சி இல்லாதவர்களே கொரோனா தொற்றால்  அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 73 சதவீதம் பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மக்களே, குறிப்பாக இளைய தலைமுறையினரே, உங்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.   உடற்பயிற்சி செய்வதற்கு மிகச் சிறந்த நேரம் அதிகாலைப் பொழுது என்று இன்றைய உடலியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

மூச்சை ஆழமாக இழுத்து மூச்சுப் பயிற்சி செய்யலாம். ஒவ்வொரு நிலையிலும் பத்து வினாடிகள் அப்படியே வைத்திருந்தால் உடலுக்கு நல்லது.

உடலில் கொழுப்பு வடிவில் சேமித்து வைக்கப்பட்ட கலோரிகள் எரிந்து தேவையற்ற உடல் கொழுப்பைக் கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது.

உடலின் “வளர்சிதை” மாற்றங்களை அதிகரிக்கிறது. ஜீரண நேரத்தை அதிகப்படுத்தி பசியை மட்டுப்படுத்தவும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது.

எப்படியானாலும் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கேற்ற ஒரு திட்டத்தைத் தயாரித்துக் கொள்ளுங்கள். ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து கடைப்பிடியுங்கள். கொரோனாவில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.