நாமக்கல்

கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலம் பரவுவதாக சமூக வலைத் தளங்களில் ஒரு தகவல் வெளியாகியது.  இதனால் பயந்து போன மக்கள் கோழிக்கறி உண்பதை அடியோடு நிறுத்தி விட்டனர்.  அத்துடன் கோழி முட்டைகளும் விற்பனை ஆகாமல் தேங்கி விட்டன.  இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கடும் இழப்பைச் சந்தித்துள்ளனர்

இது குறித்து இன்று தமிழக முட்டைக் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் சங்கம் ஒரு ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள நளா ஓட்டலில் நடந்தது.  அப்போது ச்மூக வலைத் தளங்களில் பரவும் தகவலால் கோழிக்கறி மற்றும் முட்டை விற்பனை குறைந்துள்ளது குறித்தும், இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு அடைவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் தமிழக முட்டைக் கோழிப் பண்ணையாளர் வர்த்தக சங்க நிர்வாகி சுப்பிரமணி கோழிக் கறி சாப்பிட்டால் கொரோனா வரும் என யாராவது நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கத் தயார் என அறிவித்துள்ளார்.