சென்னை:
மிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த ஒரு   மாதத்துக்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்தவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளது. நேற்று இரவு தகவல்படி,  1520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 457 ஆக உள்ளது.
தற்போது, கொரோனா பரவல் குறித்து, சீனாவில் இருந்து வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ரேபிட் கிட் மூலம் சோதனைக்கு 2 நாட்கள் ஐசிஎம்ஆர் தடை விதித்து உள்ளது.
இந்த நிலையில்,  கொரோனா பரவலை மேலும், தடுக்கும் வகையில், ஒரு மாதத்துக்கு முன்பு யாருக்கெல்லம் சளி, காய்ச்சல் இருந்ததோ அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.