சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்பாக,  மருத்துவ  நிபுணர் குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  அதே வேளையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்ற னர்.

அதே வேளையில் அக்டோபர் மாதம், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சமடையும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்ற்னர்.  இந்த நிலையில், தொற்று பரவல் உள்பட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 9.30 மணி அளவில், தலைமைச்செயலகத்தில், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.அப்போது, தற்போதைய மருத்துவ கட்டமைப்பு மற்றும் கொரோனா தடுப்பு சிகிச்சை, மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.