கிறித்துவ மக்கள் வீட்டில் இருந்தபடியே புனித வெள்ளி பிரார்த்தனை

ரோம்

நேற்று ஏசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளியை முன்னிட்டு கிறித்துவர்கள் வீட்டில் இருந்தே பிரார்த்தனை நடத்தினர்.

தனிமையில் பிரார்த்தனை செய்யும் போப்

உலகம் முழுவதும் உள்ள கிறித்துவர்கள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி அன்று தேவாலயங்களுக்கு சென்று சிறப்புப் பிரார்த்தனை நடத்துவது வழக்கமாகும்.   ஆனால் பல நாடுகளில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தேவாலயங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே நேற்று கிறித்துவ மக்கள் வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை நடத்தினார்கள்.  ஜெருசலேம் நகரில் அமைந்துள்ள புனித செபுல்சர் நகரில் உள்ள தேவாலயத்தில் ஒரு சில மத குருக்கள் மட்டும் வந்த சடங்குகளைச் செய்தனர்.  அதான் பிறகு ஏசு சிலுவை ஏந்தி சென்றதாகக் கூறப்படும் டொலோரோசா வழியாகச் சிலுவை ஊர்வலம் நடந்தது.   இதிலும் யாரும் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

கத்தோலிக்கர்களின் தலைநகரான வாடிகன் நகரில் இந்த வாரம் நடைபெற இருந்த அனைத்து புனித நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டது.  நேற்று போப் பிரான்சில் பார்வையாளர்கள்  யாரும் இன்றி தனியாக செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் புனித வெள்ளி பிரார்த்தனையை நடத்தினார்.  உலகெங்கும் உள்ள கிறித்துவர்கள் இதை ஆன்லைன் மற்றும் டிவி மூலம் பார்த்து வீட்டில் பிரார்த்தனை நடத்தினர்.