நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி எந்த விஷயத்திலும், ’சுருக்’ கென கருத்து தெரிவிக்கும் சிவசேனாவின் கட்சி பத்திரிகையான ‘சாம்னா’’ வில், அதன் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராத் எழுதியுள்ள கட்டுரையில், உலகில் முதன் முறையாக கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடித்த ரஷ்யாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

‘’ரஷ்யா கண்டு பிடித்த கொரோனா வைரஸ் மருந்து மீது உலக நாடுகள் நம்பிக்கை கொள்ள வில்லை. அந்த நாட்டு அதிபர் புதின், தனது மகளுக்கே அந்த மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்தியுள்ளார்.. அந்த நாட்டை நமது ஊர் அரசியல் வாதிகள் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஏனென்றால், அவர்கள், அமெரிக்கா மீது நேசம் கொண்டவர்கள்’’ என சஞ்சய் ராத் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர் மகந்த் நிருத்ய கோபால்தாசுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி இருப்பதை தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள சஞ்சய் ராத்’’ ராமர் கோயில் கட்டிமானத்துக்கான பூமி பூஜையின் போது, மகந்துக்கு கை கொடுத்த நமது பிரதமர் மோடி, தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

-பா.பாரதி