எம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…

சென்னை:  தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று   கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்புக்கு பல சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளாகி உள்ளனர். ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சைபெற்று குணமடைந்து வருகின்றன.

இந்த நிலையில் திருவாடானா தொகுதி சுயேச்சை எம்எல்ஏ கருணாஸ் உதவியாளருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில், தற்போது கருணாஸ்-க்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதுபோல பூம்புகார் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ்க்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி