கொரோனா : சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 60 ஆனது

--

சென்னை

கொரோனா பரவுதலால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து 60 ஆகி உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக இருந்தது.

ஆனால் தற்போது அது மீண்டும் உயர்ந்து நேற்றைய எண்ணிக்கை 13,283 ஆகி உள்ளது.

கடந்த இரு வாரங்களில் தலைமைச் செயலகத்தில் மட்டும் 200 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் ஆவார்கள்.

தற்போது சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.

நேற்று மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மொத்தம் 60 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட  பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.