சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்..

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா கண்டெயின்மென்ட் ஷோன் (Containment Zones) படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது  மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், 26  இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

bty

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்தது தெரிய வந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வந்தது. அதுபோல, சென்னையில் இருந்து வெளியேறியவர்களால் மற்ற மாவட்டங்களிலும், தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

சென்னையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மே மாதம்  357 பகுதிகள் முழுமையாக மூடப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டது.  பின்னர் இது படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த மாதம்   இந்த நிலையில் தற்போது மேலும் 62 பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்த பகுதிகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்ப ட்டு உள்ளது. இதையடுத்து, கடந்த ஜூலை மாத இறுதியில் கட்டுப்பாட்டு பகுதிகள் வெகுவாக குறைந்துள்ளதாக  சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் 26 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொற்று பரவல் குறைந்து  வருவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அதிகரித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  இன்றைய நிலையில், 1,13,058-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கார்ட்டூன் கேலரி