செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு…

சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில்  இன்று மேலும்  197 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,399-ஆக  அதிகரித்து உள்ளது. அங்கு, இதுவரை  60 பேர் பலியாகி உள்ள நிலையில், 1825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும், நோய்த் தொற்றில் இருந்து  2,316 பேர் குணமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 192 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்த   பாதிப்பு எண்ணிக்கை 3,099ஆக-ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 45 பேர் பலியானா நிலையில், 1,468 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று  மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே  272 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை274 ஆக உயர்ந்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி