தமிழகத்தில் கொரோனாவில் தொற்றில் இருந்து 2.83 லட்சம் பேர் குணம்…!

சென்னை: தமிழகத்தில் இதுவரை 2.83 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக 5,890 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று மட்டும் அதிகபட்சமாக 67,532 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மொத்தம் 37,78,778 பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

கொரோனாவில் இருந்து இன்று மட்டும் கிட்டத்தட்ட 5,667 பேர் குணம் பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை ஒட்டு மொத்தமாக 2,83,937 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இன்று ஒரே நாளில் 120 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,886 ஆக அதிகரித்துள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.