மாஸ்கோ

டந்த ஆறு நாட்களாக ரஷ்யாவில் தினமும் கொரோனா தொற்று 10000க்கும் அதிகமாக உள்ளது.

சீன நாட்டில் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று பல உலக நாடுகளை பாதித்துள்ளது.   இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் பாதிப்பு உண்டாகி இருக்கிறது.  உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39.5 லட்சத்தை தாண்டி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.71 லட்சத்துக்கும் மேல் உள்ளது.  இதுவரை 13.59 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான ரஷ்யாவில் கடந்த ஆறு நாட்களாகத் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10000 ஐ தாண்டி உள்ளது நேற்று மட்டும் 10,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,87,859 பேர் பாதிக்கப்பட்டு அதில் 1723 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர்.

இந்த பரவுதலைத் தடுக்க ரஷ்ய அதிபர் புடின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.   ரஷ்யாவில் ஐந்து வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.   கொரோனா தாக்குதலால் கச்சா எண்ணெய் வர்த்தகம் மிகக் குறைந்து விலைகள் சரிந்துள்ளதால் ரஷ்யா தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. எனவே மே இறுதிக்குப் பிறகு ஊரடங்கு விலக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.