செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி,நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 253 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 9,917 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டும் வருகின்றனர்.

இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,723 ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா:

வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 4,642 ஆக அதிகரித்துள்ளது.


தேனி மாவட்டத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
தேனி மாவட்டத்தில் மேலும் 170 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,069 ஆக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.