வாஷிங்டன்

மெரிக்காவில் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை இரு வாரங்களில் உச்சநிலை அடையும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.  அமெரிக்காவில் இன்று மட்டும் 333 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அதே வேளையில் மரணம் அடைவோர் எண்ணிக்கை இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளை விட குறைவாக உள்ளது.

அமெரிக்காவில் கொரோன பரவுதலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி அறிவிக்கபட்டுளளது.  இது வரும் ஏப்ரல் 30 வரை நீட்டிக்க உள்ளது குறித்து அதிபர் டிர்மப் வெள்ளை மாளிகையில்  இருந்து உரையாற்றினார்.

டிரம்ப் தனது உரையில் ”கணக்கெடுப்பின் படி இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை உச்சநிலையை அடையக்கூடும்.

எனவே இந்த வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்க ஏப்ரல் 30 வரை சமூக இடைவெளி காலம் நீட்டிக்கப்படுகிறது.

வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் நாம் மீட்புப் பாதையில் செல்ல தொடங்குவோம்” என அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஈஸ்டர் முதல் அமெரிக்கா மீட்புப் பாதையில் செல்லும் எனக் கூறி வந்ததை தற்போது டிரம்ப் மாற்றிக் கொண்டுள்ளார்.