இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு…

டெல்லி:

ந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குலுக்கு  உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை 4 ஆக இருந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வந்த, இத்தாலி சுற்றுலாப் பயணி, சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்தார். இதன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மத்தியஅரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இதுவரை 171 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன..

இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்த நிலையில், இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஆன்ரி சார்லி கொரானா வைரஸினால் பாதிக்கப்பட்டு ராஜஸ்தானில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 5 ஆக உயர்ந்துள்ளது.

ஆன்ரி சார்லி  மனைவியும் வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.