மகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு

--

மகாராஷ்டிரா:

ந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு 621, டெல்லி 503, தெலுங்கானா 321, கேரளா 314, உத்தரபிரதேசம் 305 ஆகிய மாநிலங்களில் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதிதாக 120 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 748 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதித்தவர்கள் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மேலும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 இருந்த நிலையில், தற்போது 52 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே 59 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.