அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு!

பாரிஸ்: கொரோனா மரணங்கள் அதிகரிப்பதால், பிரான்ஸ் நாட்டில், மீண்டும் ஒருமாத காலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பாரிஸ் நகரின் புகழ்பெற்ற விவசாயிகளின் சந்தையில், வணிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருகிறார்கள்.

அதேசமயம், கடந்துபோன வசந்த காலத்தில் கண்டதைவிட, தற்போதைய புதிய முடக்கமானது மிதமானது. இந்தப் புதிய ஊரடங்கால், அந்நாட்டின் மருத்துவர்களுக்கு ஒருபுறம் நிம்மதி ஏற்பட்டிருக்க, வணிகர்களுக்கு கெட்ட செய்தியாக அமைந்துள்ளது.

உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமில்லாத வணிகங்கள், இந்தப் புதிய முடக்கத்தின்படி மூடப்படும். அதேசமயம், பள்ளிகள், விவசாயிகளின் சந்தைகள், பூங்காக்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவை கட்டுப்பாடுகளுடன் செயல்படும்.

இந்தப் புதிய ஊரடங்கை அமலாக்குவது தொடர்பாக, அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் தற்போதைய அதிபர் மேக்ரானின் கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது.

 

You may have missed