பாகிஸ்தானில் 97 பேர் பலியான விபத்துக்கு காரணம் கொரோனா விவாதம்..

பாகிஸ்தான் இண்டர்நேஷனல் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் கடந்த 22 ஆம் தேதி கராச்சியில் தரை இறங்க முற்பட்டது.

அப்போது அருகே இருந்த குடியிருப்புகள் மீது விமானம் விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் 97 பேர் உயிர் இழந்தனர்.

விமான விபத்துக்கு என்ன காரணம்? என்று ஆராயக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

அந்த குழுவின் அறிக்கையில், விமானத்தைத் தரை இறக்கும் போது விமானியும், துணை விமானியும் (கோ பைலட்) கொரோனா நோய் குறித்து விவாதம் செய்து கொண்டே இருந்துள்ளனர் என்றும், விமானத்தை இறக்குவதில் கவனம் செலுத்த வில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திடுக்கிடும் தகவலைத்  தெரிவித்துள்ள பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான்,’’ விமானத்தில் எந்த வித தொழில்நுட்ப கோளாறும் கிடையாது. 100 சதவீதம் பறப்பதற்குத் தகுதியான நிலையில் இருந்தது’’ என்று கூறினார்.

விமானிகளின் கொரோனா ’’சம்பாஷனை’’  97 பேரின் உயிரைப் பறித்த சம்பவம், அதிர்ச்சி  அலைகளை ஏற்படுத்தியுள்ளது.