சென்னையில் குறைந்து வரும் கொரோனா… கட்டுப்பாட்டு பகுதிகள் 11 ஆக குறைந்தது

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொற்று பரவல் உச்சம்பெற்றிருந்த நிலையில், படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 11 ஆக குறைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்திலேயே கொரோனா தொற்று பரவலில் முதலிடத்தில் இருந்து வருவது சென்னை. ஆனால், சமீப நாட்களாக தொற்று பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைந்து வரும் நிலையில் உயிரிழப்பும் குறைந்து வருகிறது. குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறத.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக, சென்னையில் அறிவிக்கப்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைந்து வருகின்றன. தற்போதைய நிலையில்,  சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 11 ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.