சென்னை:
தமிழகத்தில் வேலை செய்துவந்த சந்திஸ்கர் மாநில இளைஞர், அங்கு தனிமைப்படுத்தப்பட்ட தால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், அனைத்து நிறுவனங்களையும் மூட உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், தமிகத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சத்திஸ்கர் மாநில இளைஞர், இங்கு நிறுவனம் மூடப்பட்டதால், வேலையின்மை காரணமாக சொந்த மாநிலத்துக்கு சென்றார்.
அங்கு அவருக்கு கொரேனா சோதனை நடத்தப்பட்டது. பின்னர் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்து தலில் இருக்க உத்தரவிடப்பட்டது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[youtube-feed feed=1]