கடவுள் தேசத்தில் உள்ளேயும், வெளியேயும்..

ந்தியாவில் கொரோனா வைரசை முதலில் தருவித்த கொண்ட மாநிலம் , கடவுள் தேசம் என்று வர்ணிக்கப்படும், கேரளா தான்.

எனினும் கொரோனாவை அந்த மாநிலம் கட்டுக்குள் வைத்துள்ளது.

கொரோனாவுக்கு கேரளாவில் இதுவரை 3 பேர் தான் உயிர் இழந்துள்ளனர்.

சோகம் என்ன வென்றால், கொரோனாவுக்கு வெளிநாட்டில் வசிக்கும் கேரள வாசிகள் 55 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

அவர்கள் உயர் பதவிகளில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக பட்சமாக அமெரிக்காவில் 24 கேரளவாசிகளை கொரோனா காவு வாங்கியுள்ளது.

இதற்கு அடுத்த படியாக ஐக்கிய அரபு நாடுகளில் கேரளாவை சேர்ந்த 16 பேர் கொரோனாவுக்கு உயிர் இழந்துள்ளனர்.