கொரோனா : மாவட்டவாரியான தாக்குதல் விவரம்

சென்னை

கொரோனா தாக்குதல் குறித்த மாவட்டவாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும கொரோனா தொற்று தொடர்ந்து சென்னையில் அதிகமாக உள்ளது.

நேற்று சென்னையில் 3330 ஆக இருந்த கொரோனா தொற்று இன்று 509 அதிகரித்து இதுவரை 3839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பாதிப்பில் 394 பேருடன் நேற்று இரண்டாம் இடத்தில் இருந்த கடலூர் மாவட்டத்தில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 395 ஆகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 290 ஆக இருந்தது இன்று 47 பேருக்குத் தொற்று உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 337 ஆகி மூன்றாம் இடத்தில் உள்ளது.

அடுத்தபடியாக இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 43 பேருக்குத் தொற்று உறுதி ஆகி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை நேற்று 6535 ஆக இருந்தது இன்று 669 அதிகரித்து 7204 ஆக உயர்ந்துள்ளது.