சென்னை

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கொரோனா வைரஸால் நேற்று தமிழகத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   மொத்தம் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1629  ஆகி உள்ளது.  இதில் சென்னை மாவட்டத்தில் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது மாவட்ட வாரியாக மிகவும் அதிகம் ஆகும்.

இதுவரை 662 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   இவர்களில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து 24 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.  குணமடைந்தோரில் ஒரு அரசு மருத்துவரும் உள்ளார்.

சுமார் 42 வயதாகும் இந்த மருத்துவர் மருத்துவமனையில் சேர்க்கபட்ட இரண்டாம் நாள் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனை மருத்துவர் குழுவால் சிகிச்சை பெற்று வந்தார்.  இப்போது அவர் முழுவதுமாக குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த மருத்துவர், “எனது நண்பர்கள் என்னைத் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.  நான் அதை மறுத்து விட்டு இங்கேயே தங்கி சிகிச்சை பெறுவேன் எனத் தீர்மானமாக இருந்து தற்போது குணம் அடைந்துள்ளேன்” எனக் கூறி உள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=DsUwE17AXX8]