சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பிரத்யேக யாகம் நடத்த தமிழக அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு அறிவித்துள்ள ஊரடங்களை மக்கள் கடைபிடிக்காததால், நோய் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக கோவில்கள் சிறப்பு யாகங்கள் நடத்த அறநிலையத்துறை  உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  வருகிற 1 மற்றும் 4ஆம் தேதிகளில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு யாகத்தின்போது,  ஹோமம், பாராயணம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்,  யாகங்களில் பொதுமக்கள் பங்கேற்க கூடாது, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.