சந்தையின் பங்குகளை சரிய வைக்கும் கொரோனா வைரஸ் அச்சம்!

மும்பை: உலகெங்கிலும் கொரோனா வைரஸ் அச்சம் ஆட்டிப்படைத்து வருவதால், அதன் தாக்கம் காரணமாக இந்தியப் பங்குச் சந்தையிலும் சென்செக்ஸ் 807 புள்ளிகள் சரிந்தன.

கொரோனா அச்சம் கார­ண­மாக உலக பங்­குச் சந்­தை­களில், முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் பங்­கு­களை விற்க துவங்கி இருக்கின்றனர்.

இதன் தாக்­கம், நேற்று இந்­திய பங்­குச் சந்­தை­க­ளி­லும் எதிரொலித்­தது. மும்பை பங்குச் சந்­தை­யின் சென்­செக்ஸ் 807 புள்­ளி­கள் சரி­வைக் கண்­டது. இது 1.96% சரி­வா­கும்.

இதே­போல், தேசிய பங்­குச் சந்­தை­யின் நிப்­டி­யும் 251 புள்­ளி­கள் சரி­வைக் கண்­டது. இது 2.08% சரி­வா­கும். சென்­செக்ஸ் 30ல் உள்ள அனைத்து நிறு­வ­னப் பங்­கு­க­ளுமே சரி­வைக் கண்­டன.

குறிப்­பாக, டாடா ஸ்டீல் பங்குகள் 6.39% சரி­வைக் கண்­டது. டாடா ஸ்டீலை அடுத்து, ஓஎன்ஜிசி மற்றும் மாருதி நிறு­வ­னப் பங்­கு­களும் சரிந்­தன. இந்நிலையில், உலக பன்­னாட்டு நிதி­யம், ஏற்கனவே பல­வீ­ன­மாக இருக்­கும் உல­கப் பொரு­ளா­தா­ரம், மேலும் பாதிப்­புக்கு ஆளா­கும் என எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளதும் கவனிக்கத்தக்கது.