கொலையில் முடிந்த கொரோனா அச்சுறுத்தல் : ஊட்டி பேக்கரி ஊழியர் கைது

ட்டி

கொரோனா குறித்த சர்ச்சை காரணமாகச் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரை பேக்கரி ஊழியர் கொலை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டியில் உள்ள நொண்டிமேடு பகுதியில் வசிக்கும் ஜோதிமணி என்னும் 40 வயத் நபர் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ள்ளர்.  இவர் சுமை தூக்கும் தொழிலாளிகள் சங்க செயலாளர் ஆவார்.   இவர் தனது நன்பர் நாராயணன் குட்டி நடத்தும் மெஸ்ஸில் மீன் சாப்பிட நண்பர்களுடன் சென்றுள்ளார்.  அங்கு பேக்கரி ஊழியரான தேவதாஸ் வந்துள்ளார்.

தேவதாஸ் தாம் நேற்று கேரளாவில் இருந்து வந்ததாக மெஸ் முதலாளியிடம் தெரிவித்துள்ளார்.  இதனால் ஜோதிமணி அவரை தனது அருகில் அமர வேண்டாம் என கூறி உள்ளார். தேவதாஸ் அதற்குக் காரணம் கேட்டதால்  கேரளாவுக்குச் சென்று வந்தவருக்கு கொரோனா தாக்குதல் இருக்கக் கூடும் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றவே தேவதாஸ் ஆத்திரம் அடைந்து மெஸ்ஸில் இருந்த கத்தியை எடுத்து ஜோதிமணியின் கழுத்தில் ஓங்கி ஓங்கிக் குத்தி உள்ளார்.  இதனால் பலத்த காயமடைந்த ஜோதிமணி ரத்த வெள்ளத்தில்விழுந்தார்.  அவரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி சுமை தூக்கும் தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களைச் சமாதானம் செய்த காவல்துறையினர் தேவதாஸை கைது செய்து வழக்குப் பதிந்துள்ளனர்.  இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.  கொரோனா அச்சுறுத்தல் கொலையில் முடிந்ததால் மக்கள் துயரம் அடைந்துள்ளனர்

You may have missed