4 கண்டக்டர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா: செய்யாறு அரசு பேருந்து பணிமனை மூடல்

செய்யாறு:

பேருந்து கண்டக்டர்கள்  4 பேர் உள்பட  6 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து செய்யாறு பேருந்து பணிமனை இன்று அதிரடியாக மூடப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திருவண்ணாமலை மண்டலத்தில் அமைந்துள்ளது செய்யாறு பணிமனை. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பணிமனையில் இருந்து சுமார் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.  அங்கிருந்து வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை, அப்துல்லாபுரம் கூட்ரோடு ஆகிய பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அங்கு பேருந்து இயக்கி வந்த டிரைவர் ஒருவதுக்கு ஜூன்.12 ந்தேதி கொரோனா உறுதியானது. இதையடுத்து, அவருடன் பணியாற்றி வந்த மற்றும், போக்குவரத்துக் பணிமனை தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், 2 டிரைவர்கள், 4 கண்டக்டர் என 6 பேருக்கு இருப்பது தெரிய வந்தது.  இதையெடுத்து கொரோனா தொற்று பரவமால் தடுக்கும் விதமாக தமிழக போக்குவரத்துறை அமைச்சரின் ஆலோசனையின் பேரில் திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் தசரதன் உத்தரவின் பேரில் செய்யாறு அரசு பேருந்து பணிமனை திங்கள்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிட்டப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

செய்யாறு அரசு பேருந்து பணிமனை மூடப்பட்டதால் பொது மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க வந்தவாசி, ஆரணி ஆகிய பணிமனைகளில் இருந்து வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை, அப்துல்லாபுரம் கூட்ரோடு ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.