திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா! அப்போலோவின் அனுமதி…

சென்னை : திமுக எம்.எல்.ஏ சேகர் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் அப்போலோவின் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கொரோனா பொதுமுடக்கத்தின்போதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் பகுதியில் கலந்துகொண்ட நிவாரண பணிகளின்போதும், முன்னணியில் இருந்து செயல்பட்டவர்  துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபு.

இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்பாதிக்கப்பட்ட நிலையில்,  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு  கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதால், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்,  அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையாக புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருவதாக தகவல்கள்  பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.