கொரோனா : முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் சவுகான் மரணம்

குருகிராம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தரப்பிரதேச அமைச்சருமான சேதன் சவுகான் மாரடைப்பால் காலமானார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான சேதன் சவுகான் உத்தரப்பிரதேச அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.

இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது.

இதையொட்டி சேதன் சவுகான் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று மாலை சுமார் 4.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

சேதன் சவுகானுக்கு தற்போது 73 வயதாகிறது.

அவருடைய மறைவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

You may have missed