டெல்லி:

ந்தியாவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 மாவட்டங்களில் உள்ள  நகரங்களுக்கு வரும் 20ந்தேதியில் இருந்து ஊரடங்கில் இருந்து பல்வேறு நிபந்தனைகளுடன் விலக்கு அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வந்தன.

ஆனால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உள்ள பல நரகங்களில் கொரோனா தொற்று தற்போது தீவிரமடைந்துள்ளதால், ஊரடங்கை நீட்டிக்க கோரி மத்தியஅரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி,  நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படு வதாக அறிவித்தார். மேலும், ஏப்ரல் 20 க்குப் பிறகு சில பகுதிகளுக்கு விலக்கு அளிக்க முடியும் என்ற விஷயத்தையும் கோடிட்டு காட்டியவர், அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள்  சில நிபந்தனைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால்,

நாடு முழுவதும் 15 மாநிலங்களின் 25 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிய கொரோனா வழக்குகள் எதுவும் இல்லை, அந்த மாவட்டங்கள்  கொரோனா வுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதை நோக்கி நகருவதாகவும், இந்த மாவட்டங்களில் புதிய  கேஸ்கள் ஏதும் வரக்கூடாது என்ற வகையில்  அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  கூறினார்.

இந்த மாவட்டங்களின் பெயர்களை பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டதுடன், அந்த மாவட்டங்கள் இதே ஆற்றலுடன் நமது விழிப்புணர்வை  தொடர்ந்து பராமரிக்க வேண்டும். எதிர்வரும் நாட்களில் இந்த மாவட்டங்களில் நேர்மறையான வழக்குகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாங்கள் எல்லா மட்டங்களிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். சரியான நேரத்தில்  தொழில்நுட்ப உதவியுடன் நேரடி நோய் தொற்று குறித்து தொடர்ந்து கண்காணிப்பு, சரியான திட்டமிடல் ஆகியவற்றை செயல்படுத்துகிறோம் என்றும் தெரிவித்தார்.

அவர் தெரிவித்த 25 மாவட்டங்களில், முதல்கட்டமாக 15 மாவட்டங்களில் வரும் 20ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரின் இன்றைய உரையின்போது தெரிவித்துள்ள கருத்தின்படி, கொரோனா தொற்று அதிக வீரியமுடன் பரவி வரும் இந்த காலக்கட்டத்தில்,  “ஒவ்வொரு நகரத்திலும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் எவ்வளவு ஊடரங்கு பின்பற்றப்படுகிறது, கொரோனாவிலிருந்து  எவ்வளவு  பேரை மாநில அரசுகள் காப்பாற்றுகின்றனர், கொரோனா  ஹாட்ஸ்பாட்களை வளர அனுமதிக்காத பகுதிகள் போன்றவற்றை மதிப்பீடு செய்து, குறிப்பிட்ட மாவட்டங்கள், நகரங்களுக்கு தேவையான சில நடவடிக்கைகளை ஏப்ரல் 20 முதல் அனுமதிக்கலாம் மற்றும் விலக்கு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  இதற்கான விரிவான வழிகாட்டுதல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஊரடங்கு விலக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நகரங்கள்

கர்நாடகா – தேவாங்கிரி, உடுப்பி, தும்குரு மற்றும் கோடகு

கேரளா – வயநாடு மற்றும் கோட்டயம் 

மகாராஷ்டிரா – கோண்டியா

சத்தீஸ்கர் – ராஜ்நந்த்கான், துர்க் மற்றும் விலாஸ்பூர் 

மணிப்பூர் – மேற்கு இம்பால்

கோவா – தெற்கு கோவா

ஜம்மு-காஷ்மீர் – ராஜோரி 

மிசோரம் – ஐஸ்வால் வெஸ்ட்

புதுச்சேரி – மாகே

பஞ்சாப் – எஸ்.பி.எஸ் நகர்

பீகார் – பாட்னா, நாலந்தா, முகர்

ராஜஸ்தான் – பிரதாப்கர் 

அரியானா – பானிபட், ரோஹ்தக், சிர்சா

உத்தரகண்ட் – பவுரி கர்வால் 

தெலுங்கானா – பத்ராட்ரி கோட்டகுடம்