கொரோனா: அரியானாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு!

ரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து வணிக வளாகங்கள், போக்குவரத்து அனைத்தும் முடங்கி மாநிலமே வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்தியாவில் தொற்று அதிகம் பரவும் மாநிலங்களில் அரியானாவும் ஒன்று. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000ஐ கடந்துள்ளதோடு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 578 ஆக அதிகரித்துள்ளது.  இங்கு தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து வார இறுதிநாட்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது.

அதப்டி, இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.