டெல்லி:

கொரோனா பரவல் ஹாட்ஸ்பாட்டாக  திகழ்ந்த, டெல்லியில்  நடைபெற்ற  தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மதபோதனை கூட்டம் அகற்றப்பட்டது. அங்கிருந்த 2361 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன்  இஸ்லாமியர்களின் மதபோதனை கூட்டம் கொரோனா வைரஸ் பரவலில் ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கூட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல மத போதகர்கள் கலந்துகொண்ட நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் கலந்துகொண்ட தகவல் வெளியாகி உள்ளது.

நிஜாமுதீன் கட்டிடத்தில் உள்ள ஒரு  பெரிய கூட்டத்தில் கலந்து கொண்ட 200 பேரு கொரோனா நோய்தொற்று உறுதியாகி உள்ளது.   இந்த மதபோதனை கூட்டத்தில் தமிழகத்தில் இருந்தும் 100க்கும் பட்டோர் கலந்துகொண்ட நிலையில், அவர்களில் 50க்கும் மேற்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்துதலில் வைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது

இந்த மதபோதனை கூட்டத்தில் கலந்துகொண்ட 5 பேர் தெலுங்கானாவில் இறந்துள்ளனர். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, அந்த மதக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் அடையாளம் காணவும், தனிமைப்படுத்தவும், சோதிக்கவும் ஏறக்குறைய 20 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

மார்ச் 28 ம் தேதி உள்துறை அமைச்சகம் தனது கடிதத்தில், சுற்றுலா விசாவில் வந்து, இந்த மத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளையும் ஸ்கீரின் டெஸ்ட் செய்து அ றிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

“எந்தவொரு தப்லீகி அணியின் ஒரு அங்கமாக இருக்கும் ஒவ்வொரு வெளிநாட்டவரும் COVID-19 இன் சூழலில் முழுமையாகத் திரையிடப்படலாம் மற்றும் தேவைப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அத்தகைய வெளிநாட்டவர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகி இருந்தது கண்டறியப் பட்டால், உடனடியாக கிடைக்கக்கூடிய முதல் விமானங்களால் அவர் உடனடியாக நாடு கடத்தப்பட வேண்டும், என்று உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.

இந்த நிகழ்வு குறித்து கூறிய, மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, தப்லிகி ஜமாஅத்தின் நடவடிக்கை “ஒரு தலிபானி குற்றம்” என்று கூறினார். “இத்தகைய குற்றச் செயலை மன்னிக்க முடியாது. அவர்கள் பலரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளனர். அரசாங்க உத்தரவுகளை மீறும் அத்தகைய நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ”என்று வலியுறுத்தி உள்ளார்.

கடந்த வாரம், சிஆர்பிசி பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகள் நகரம் முழுவதும் நடைமுறையில் இருந்தபோது, ​​அரசு அனுமதியின்றி சுமார் 200 பேர் கலந்து கொண்ட மதக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஆர்.பி.மீனா, “முழு நகரமும் ஊரடங்கு நிலையில் உள்ளது. நிஜாமுதீன் பகுதியிலிருந்து கொரோனாவின் அறிகுறிகளைக் காண்பிக்கும் சில பாதிப்புகள் உறுதியானதை அடுத்து, ​​மக்கள் ஊரடங்கை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக சந்தை இடங்களிலும், பாதைகளிலும் அதிகமான காவல்துறையினரை கண்காணிப்புக்கு அனுப்பி உள்ளதாகவும்,  நிஜாமுதீன் பஸ்தி பகுதியில் அதிக மக்கள் தொகை அடர்த்தி உள்ள பகுதி என்றும் கவலைத்தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரசுக்கு ஐம்பத்து மூன்று பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா,

வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ள நிஜாமுதீன் மார்க்காஸ் இன்று காலை அகற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து  2,361 பேர் வெளியேற்றப்பட்டதாகவும், அவர்களில் 617 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,   இந்த கடுமையான 36 மணி நேர நடவடிக்கையில்  மருத்துவ ஊழியர்கள், நிர்வாகம், காவல்துறை மற்றும் டிடிசி ஊழியர்கள் இணைந்து பணியாற்றி, தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வணக்கம் என்று தெரிவித்து உள்ளார்.