கொரோனா : தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் சோதனை நிலையத்துக்கு அனுமதி

சென்னை

மிழகத்தில் கொரோனா சோதனை நடத்த மேலும் ஒரு தனியார் சோதனை நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைர்ஸ் தொற்று இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் இதுவரை 650 பேரைப் பாதித்த கொரோனா 16 பேரை பலி வாங்கியுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைச் சோதிக்கச் சோதனை நிலையங்கள் போதுமான அளவுக்கு இல்லை.

எனவே கொரோனா சோதனை  செய்யத் தனியார் சோதனை நிலையங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி வருகிறது.  அவ்வகையில் தமிழகத்தில் ஏற்கனவே வேலூர் சிஎம்சி மருத்துவமனை, அப்பல்லோ மற்றும் நியுபெர்க் என்ரிச் லாப உள்ளிட்ட தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு வழங்கிய இந்த அனுமதியால் இனி பொதுமக்கள் இங்கும் கொரோனா சோதனை செய்துக் கொள்ள முடியும்.