பொருளாதார பாதிப்புகள் – தொய்வை சந்தித்த இந்திய சேமிப்புப் பழக்கம்!

கொரோனா தொடர்பான பொருளாதார காரணிகளால், சேமிப்பிற்கு புகழ்பெற்ற இந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சேமிப்பானது 38% என்பதிலிருந்து 32% என்பதாக குறைந்துள்ளது.

தொழில்முறை பணியாளர்கள் என்று வருகையில், 28 – 34 வயது வரையானவர்கள், 35-45 வயது வரையானவர்களிடையே சேமிப்பு பழக்கம் கணிசமாக குறைந்துள்ளது.

எனினும், முதல்முறை ஊதியம் பெறுபவர்கள் அதிகம் சேமித்துள்ளனர். சந்தை ஏற்ற-இறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு சூழல் காரணமாக பலரும், ஆடம்பரமான இலக்குகளை தள்ளிப்போட்டுள்ளனர். அதேநேரத்தில் அவசரகால நிதிக்காக சேமிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பலரும் ஓய்வுகாலம் போன்ற நீண்டகால சேமிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

You may have missed