லக நாடுகளை கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில், ஆசியாவின் நம்பர்1 பணக்காரராக திகழும் அலிபாபா நிறுவனத்தின் ஜாக்மா, கொரோனா நோய் பாதிப்பில் இருந்து பொதுமக்களை தடுக்கும் வகையில் தாராளமாக உதவி செய்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  ஜாக்மா பவுண்டேஷன் சார்பில், அமெரிக்காவுக்கு  500,000 சோதனைக் கருவிகள் மற்றும் 1 மில்லியன் முகமூடிகள் நன்கொடை அளிப்பதாக ஜாக்மா அறிவித்து உள்ளார்… மேலும்,  இந்த கடினமான காலங்களில் அமெரிக்கர்களுடன் நாங்களும் கைகோர்க்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

கொரோனா  வைரஸ் தாக்கம் காரணமாக, உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி தீவிரமடைந்து வருகிறது. , கச்சா எண்ணெய் விலையும் சர்வதேசச் சந்தையில் 30 விழுக்காடு வரையில் சரிந்துள்ளது.

இந்நிலையில், இந்தியப் பங்குச்சந்தை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், திங்கள் கிழமையன்று ஒரே நாளில், மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலைச் சரிவைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் சுமார் 580 கோடி டாலர் (இந்திய ரூபாயில் சுமார் 43 ஆயிரம் கோடி) அளவுக்குச் சரிந்தது. கடந்த 11 ஆண்டுகளில், ரிலையன்ஸ் நிறுவனம் சந்தித்த மிகப்பெரிய சரிவு இதுவே ஆகும். இதன் காரணமாக, ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலிருந்த அம்பானி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அலிபாபா குழும நிறுவனர் ஜாக்மா 4,450 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 34 ஆயிரம் கோடி) சொத்து மதிப்புடன், முதலிடத்தைப் பிடித்துள்ளார். தற்போது இவரது சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விட 260 கோடி டாலர் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், சீனாவின் அலிபாபா.காம் நிறுவனர் ஜாக்மா  அமெரிக்காவுக்கு தாராளமாக உதவி செய்துள்ளார்.