கொரோனா முடக்கம் – ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார இழப்பு எவ்வளவு?

கோலாலம்பூர்: கொரோனா முடக்கம் காரணமாக, உலகின் 3வது அதிக புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட ஆசியா-பசிபிக் நாடுகள், 31.4-54.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பணம் அனுப்புதல் இழப்பை சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில், சம்பந்தப்பட்ட நாடுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வ‍ேண்டுமென கூறப்பட்டுள்ளது.

உலகின் மூன்றாவது அதிக புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டவ‍ை இந்த நாடுகள். அவர்கள் அனுப்பும் பணமானது, இந்நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன.

ஆனால், தற்போதைய கொரோனா சூழலால், பணமனுப்பும் செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பதால், சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்திற்கு 31.4-54.3 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பு ஏற்படலாம் என்று ஆசிய வளச்சி வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி