இன்று 1,261 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 72,500 ஆக உயர்வு…

சென்னை:

மிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டுள்ள 3756 பேரில் 1,261 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 72,500  ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை  49587 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து  வீடு திரும்பியுள்ள நிலையில், 21,766  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர்.  சென்னையில் இன்று 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தைதையடுத்து, சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1146-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் தொற்று பரவல் கடந்த 3 நாட்களாக சற்று குறைந்து வருகிறது. ஆனால் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது.

இன்று 3,051 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  74,167 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி