செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை:

செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை  உள்பட மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

மிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை   1,02,721 ஆக உயர்ந்துள்ளது.  பலி எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை64,689 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,308-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை   106 உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர்-2,919,  ஆகவும், நோயில் இருந்து குணமடைந்தோர்-3,113 ஆகவும் உள்ளது.

திருவள்ளூர்  மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 4,470ஆக உயர்வு

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டு உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,842 ஆக  இருந்தது. அவர்களில்,  இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர். மேலும்  509 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில்172 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2354 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 1050 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 287-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 203 ஆகவும், நோயில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை  79 ஆகவும் உள்ளது.

மதுரை மாவட்டம்

மதுரையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 3423 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  51 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 967 பேர் சிகிச்சை குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  2405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகி உள்ளது. இதனால்  கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,703-ஆக உயர்ர்ந்துள்ளது.

விருதுநகரில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி