தி.நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கு கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 41ஆக உயர்வு!

சென்னை:

சென்னை மாம்பலம் (தி.நகர்) பகுதியைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10 மாவட்டங்களைச் சேர்ந்த  41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்தறை செயலளர் பீலா ராஜேஷ்  தெரிவித்தார்.

சென்னை மாம்பலம் பகுதியைச் சேர்ந்த 25வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரது சோதனை முடிவு பாசிடிவ் ஆக இருந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த நபர் வெளிநாடுகளுக்கு ஏதும் சென்று வராத நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவு தெரிவித்துள்ளவர்,  மேலும், வீடு வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இரும்பல் இருக்கிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.