தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய நிலவரம்…

சென்னை:

மிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதுவரை சென்னையை சூறையாடிய கொரோனா தற்போது மாவட்டங்களில் பரவி தனது தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று உச்சபட்சமாக  4,328பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகி உள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது.

இன்று ஒரே நாளில் 44,560 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,54,008 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,576 பேர் ஆண்கள், 1,752 பேர் பெண்கள். 105பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

இன்று மட்டும் 66பேர் உயிரிழந்தனர். 16பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 3,035 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது.”

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,425 பேருக்கு இதுவரை  கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.38 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,966 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்ச உயிரிழப்பாக  தலைநகர் சென்னையில் 1,253 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 158 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 127 பேரும், மதுரை மாவட்டத்தில் 116 பேரும் இறந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மாவட்டரீதியாக கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு…

சென்னை – 1,140, மதுரை – 464, காஞ்சிபுரம் – 352, திருவள்ளூர் – 337, செங்கல்பட்டு – 219, குமரி – 185, விழுப்புரம் – 143, தேனி – 134, வேலூர் – 129, ராணிப்பேட்டை – 126, தூத்துக்குடி – 122, நெல்லை – 118, சேலம் – 101, திருச்சி – 92, தி.மலை – 83, திருவாரூர் – 59, புதுக்கோட்டை – 58, க.குறிச்சி – 56, ராமநாதபுரம் – 43, தென்காசி – 39, ஈரோடு – 34, சிவகங்கை – 29, கோவை – 27, நாகை – 27
, கடலூர் – 26, விருதுநகர் – 25, தஞ்சை – 22, தர்மபுரி – 20, திருப்பத்தூர் – 16, நாமக்கல் – 15, திருப்பூர் -12, கிருஷ்ணகிரி – 08, கரூர் – 2, பெரம்பலூர் – 2, நீலகிரி -1, திண்டுக்கல் – 1