சென்னை:

மிழகத்தில் இன்று  25பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி செய்தார்.

கொரோனா நோய்த்தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று தெரிவித்த முதல்வர், கொரோனா பாதிப்பிலிருந்து இ62 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

மேலும், இன்று 25 பேருக்கு மட்டுமே, கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1, 267 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் அரசு மருத்துவர்கள் 6 பேர், தனியார் மருத்துவர்கள் 5 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இதுவரை கொரோனா பாதிப்புக்கு  14 பேர் உயரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் ஒருவர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை  15ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவலில் தமிழ்நாடு இரண்டாம் கட்டத்தில் தான் உள்ளது என்று கூறிய முதல்வர்,  கொரோனா தொற்றுநோயின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருகிறது; சமூக தொற்றாக மாறவில்லை என்றும்,  இன்னும் 2 அல்லது 3 நாள்களில்  கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து விடும் என்று கூறயிவர்,  வருகிற 20ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.