இந்தியாவில் அடுத்தாண்டு பிப்ரவரியில் கொரோனா தாக்கம் குறையுமா?

புதுடெல்லி: கொரோனா தாக்கம் தற்போதைய நிலையில், இந்தியாவில் தீவிரமாக இருப்பதாகவும், சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், அடுத்தாண்டு பிப்ரவரி வாக்கில் அந்த நோயின் தாக்கம் பெருமளவில் மட்டுப்படும் என்று அரசு அமைத்த குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நிறைவடையும்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 105 லட்சம் என்பதாக இருக்கும்.

எதிர்வரும் குளிர்பருவம் மற்றும் திருவிழா காலங்களில் நோய் தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கும். இந்திய மக்கள்தொகையில் 30% பேரின் உடலுக்குள் ஆன்டிபாடி உற்பத்தியாகியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கைப்படி, கடந்த மே மாத்திலேயே இந்தியாவில் 64 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நபர்கள் பரிசோதனை மூலம் கண்டறியப்படவில்லை. எனவே, இவர்களுக்குள் ஆன்டிபாடிகள் உண்டாகியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.