சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…

சென்னை:

மிழகத்தில்  கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை  1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை கொரோனா பாதித்த 82,324 பேர் மீண்டுள்ளனர். ன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,829-ஆக அதிகரித்துள்ளது.

bty

மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக படிப்படியாக குறைந்து வருகிறது.

சென்னையில் இன்று மட்டும் 1,205 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 74,969ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை 55,156 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை , 18,616  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1196-ஆக உயர்ந்துள்ளது

கார்ட்டூன் கேலரி